உயர் ஆபத்தான மகப்பேறு இணையவாயிலை (High risk pregnancy portal) நாட்டில் முதன் முறையாக ஹரியானா மாநிலம் தொடங்கியுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் உயர் ஆபத்து மகப்பேறுக்கான கொள்கையின் ஒரு பகுதியாக இந்த இணையவாயில் தொடங்கப்பட்டுள்ளது.
தாய்-சேய் இறப்பு விகிதத்தையும் (Maternal and Infant Mortality Rate) குழந்தைகள் இறந்து பிறப்பதை (Still Birth) குறைப்பதற்கும் உதவும் வகையில் இந்த இணைய வாயில் தொடங்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் அடித்தட்டு நிலை வரை நிலவும் உயர் ஆபத்துடைய பிரசவங்களை முன் கூட்டியே கண்டறிவதற்கும், அத்தகு உயர் ஆபத்துள்ள மகப்பேறுடைய மக்களை உரிய காலத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவ நிபுணர்களின் மூலம் அவர்கள் உரிய சிகிச்சை மற்றும் பிரசவம் பெறுவதற்கு இந்த இணைய வாயில் உதவும்.