TNPSC Thervupettagam

உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஏற்றத்தாழ்வுகள்

November 2 , 2023 262 days 166 0
  • உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் 188.3 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 37% பேர் மட்டுமே அந்தப் பாதிப்பு கொண்டு உடையவர்களாக கண்டறியப் படுகிறார்கள்.
  • 30% மக்கள் அதற்கான சிகிச்சையைத் தொடங்குகிற நிலையில், மேலும் அதில் 15% பேர் மட்டுமே தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
  • இந்தப் பாதிப்பு நிலையில் உள்ளவர்களில் பாதி பேர் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தால், 2040 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் குறைந்தது 4.6 மில்லியன் இறப்புகளைத் தடுக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இரத்த அழுத்தத்தினைக் கண்டறிதல் (வரம்பு: 6.3%-77.5%), சிகிச்சை (வரம்பு: 8.7%-97.1%) மற்றும் கட்டுப்பாடு (வரம்பு: 2.7%-76.6%) ஆகியவற்றில் பல்வேறு மாவட்டங்களில் கணிசமான வேறுபாடுகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்