TNPSC Thervupettagam

உயர் கல்வியில் தமிழக அரசுப் பள்ளி மாணாக்கர்

April 17 , 2025 3 days 68 0
  • கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை சுமார் 30% அதிகரித்துள்ளது.
  • 2023-24 ஆம் கல்வியாண்டில், 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களில் குறைந்தது 74% பேர் கல்லூரிகளில் சேர்கின்றனர்.
  • 2021-22 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை வெறும் 45% மட்டுமேயாகும்.
  • மாநில அரசு ஆனது புதுமைப் பெண் திட்டத்தினை அறிமுகப்படுத்திய பிறகு, 2022-23 ஆம் ஆண்டில் இது 69% ஆக உயர்ந்தது.
  • இந்த முன்னெடுப்பு ஆனது, உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு 1,000 ரூபாய் மாதாந்திர ஊக்கத்தொகையை வழங்குகிறது.
  • 2024 ஆம் ஆண்டில் மாணவர்களுக்காக தமிழ்ப் புதல்வன் என்ற இதே போன்ற ஒரு திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியது.
  • 2022-23 ஆம் ஆண்டில், அரசுப் பள்ளிகளில் இருந்து 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதிய 3,97,809 மாணாக்கர்களில் 2,72,744 பேர் கல்லூரியில் சேர்ந்தனர்.
  • 2023-24 ஆம் ஆண்டில், சுமார் 3,34,723 மாணாக்கர்களில் 2,47,744 பேர் கல்லூரிகளில் சேர்ந்தனர்.
  • இதில் தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்த மாணாக்கரும் அடங்குவர்.
  • தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்கனவே 47% என்ற அதிகபட்ச மொத்தச் சேர்க்கை விகிதம் (GER) பதிவாகியுள்ளது என்பதோடு இது இந்தியாவின் பெரிய மாநிலங்களில் மிக அதிக பட்சமாகும்.
  • மொத்தத்தில், 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் சுமார் 7.6 லட்சம் மாணாக்கர்கள் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளைத் எழுதினர், அவர்களில் சுமார் 45% பேர் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்