TNPSC Thervupettagam

உயர் கல்வியில் முன் கற்றல்

December 17 , 2024 35 days 78 0
  • பல்கலைக்கழக மானியக் குழுவானது (UGC) முன் கற்றல் (RPL) அங்கீகாரத்திற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இது முன்னதாக கற்கப் பட்டத் தகவல், திறன்கள் மற்றும் திறமைகள் ஆகியவற்றினை நன்கு மதிப்பிட்டு அங்கீகரிப்பதன் மூலம் முறைசாரா, முறைப்படி அமையாத மற்றும் முறையான கல்விக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கட்டமைப்பானது தனிநபர்கள் தங்கள் திறன்களை நன்கு முறைப்படுத்தவும், அதற்கான மதிப்புகளைப் பெறவும், முறையான கல்வி முறையில் அவர்கள் மிக நன்கு ஒருங்கிணையவும் வழி வகுக்கிறது.
  • இதன் மூலம், மாணவர் பட்டப்படிப்புத் திட்டத்திற்குத் தேவையான மதிப்புகளில் 30 சதவீதம் வரை பெற முடியும்.
  • 2026 ஆம் ஆண்டிற்குள் பல்கலைக்கழக சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு RPL முறையை செயல்படுத்துவதனை UGC நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பல்வேறு கல்விப் பின்னணிகள் மற்றும் கற்றல் அனுபவங்களைக் கொண்ட தனி நபர்களுக்கு அவர்களின் நிரூபிக்கப்பட்ட திறன்களின் அடிப்படையில் உயர்கல்வியை அணுகுவதற்குப் பல்வேறு மற்றும் தகவமைப்பு மிக்க வழிகளை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்