பல்கலைக்கழக மானியக் குழுவானது (UGC) முன் கற்றல் (RPL) அங்கீகாரத்திற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது முன்னதாக கற்கப் பட்டத் தகவல், திறன்கள் மற்றும் திறமைகள் ஆகியவற்றினை நன்கு மதிப்பிட்டு அங்கீகரிப்பதன் மூலம் முறைசாரா, முறைப்படி அமையாத மற்றும் முறையான கல்விக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டமைப்பானது தனிநபர்கள் தங்கள் திறன்களை நன்கு முறைப்படுத்தவும், அதற்கான மதிப்புகளைப் பெறவும், முறையான கல்வி முறையில் அவர்கள் மிக நன்கு ஒருங்கிணையவும் வழி வகுக்கிறது.
இதன் மூலம், மாணவர் பட்டப்படிப்புத் திட்டத்திற்குத் தேவையான மதிப்புகளில் 30 சதவீதம் வரை பெற முடியும்.
2026 ஆம் ஆண்டிற்குள் பல்கலைக்கழக சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு RPL முறையை செயல்படுத்துவதனை UGC நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பல்வேறு கல்விப் பின்னணிகள் மற்றும் கற்றல் அனுபவங்களைக் கொண்ட தனி நபர்களுக்கு அவர்களின் நிரூபிக்கப்பட்ட திறன்களின் அடிப்படையில் உயர்கல்வியை அணுகுவதற்குப் பல்வேறு மற்றும் தகவமைப்பு மிக்க வழிகளை உருவாக்குகிறது.