தமிழ்நாட்டில் உள்ள மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் அதிக செயல்திறன் கொண்ட மெக்னீசியம் உலோகக் கலவை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதனை வாகனங்களில் எஃகு மற்றும் அலுமினியத்திற்குப் பதிலாக பயன்படுத்த முடியும்.
இந்தப் புதிய உலோகக் கலவையானது வலுவாகவும், மிகவும் மென்மையாகவும் உள்ளது. மேலும் இதன் மிகை நெகிழ்த் தன்மை அதிக உற்பத்தி விகிதங்களில் அடையப் படுவதால், இது தனது ஒட்டுமொத்த உற்பத்திக்கான நேரம், முயற்சி மற்றும் செலவுகளை குறைக்கிறது.
இது குறைந்த எடையுடன் இருப்பதால் வாகனங்களின் கரியமில தடத்தைக் குறைக்கவும் உதவுகிறது.