TNPSC Thervupettagam

உயர் தரவரிசையிடப்பட்ட விமான நிலையங்கள்

October 17 , 2017 2645 days 886 0
  • விமான நிலையங்களின் பன்னாட்டு குழு (ACI – Airport Council International) எனும் அமைப்பால் வெளியிடப்படும் சிறந்த விமான நிலையங்களின் தரவரிசையில் ஆண்டுக்கு 2-5 மில்லியன் பயணிகள் போக்குவரத்து உடைய விமான நிலையங்களின் வகைப்பிரிவில் ஜெய்ப்பூர் மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்கள் உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக தரவரிசை படுத்தப்பட்டுள்ளன.
  • பயணிகள் போக்குவரத்து அளவில் சிறந்த விமான நிலையமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஜெய்ப்பூர் விமான நிலையம் தரவரிசை படுத்தப்பட்டுள்ளது.
  • விமான நிலைய சேவைக்கான தர விருது (ASQ-Airport Service Quality Award) விமான போக்குவரத்து துறையில் வழங்கப்படும் உயரிய மதிப்புமிக்க விருதாகும்.
  • வருடாந்திர ACI – ASQ கணக்கெடுப்பில், ஜெய்ப்பூர் விமான நிலையம் முதலிடத்தையும், ஸ்ரீநகர் விமான நிலையம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
  • ASQ கணக்கெடுப்பானது, விமான நிலையங்களின் தனிச்சிறப்புடைமையை அளவிடும் உலகின் முக்கிய தரவரிசை அளவீடாகும்.
  • மேலும், இது விமான நிலையங்களில் பயணிகளின் விமான பயண தினத்தன்றே மேற்கொள்ளப்படும் ஒரே உலகளாவிய கணக்கெடுப்பு முறையாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்