TNPSC Thervupettagam

உயர் தெளிவுத் திறன் கொண்ட பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக் கோள் - சீனா

August 2 , 2018 2307 days 663 0
  • சீனாவின் ஒளியியல் தொலை உணர் செயற்கைக் கோளான கோஃபென் - 11 (Geofen - 11) என்ற செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • இது அந்நாட்டின் உயர் தெளிவுத் திறன் கொண்ட பூமியைக் கண்காணிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது சீனாவின் வடக்கு சான்க்ஷி மாகாணத்தில் உள்ள தய்யுன் செயற்கைக் கோள் செலுத்தும் மையத்திலிருந்து லாங் மார்ச் 4B ஏவுகலத்தின் மூலம் ஏவப்பட்டது.
  • செயற்கைக் கோள்களை ஏந்திச் செல்லும் லாங் மார்ச் ஏவுகலத்தின் ஒட்டு மொத்தமான 282-வது பயணம் இதுவாகும்.
  • கோஃபென்-11 என்பது துணை அளவி தெளிவுத்திறன் கொண்ட ஒளியியல் செயற்கைக் கோள் ஆகும். இச்செயற்கைக் கோள் சீனாவின் விண்வெளி தொழில்நுட்ப குழுமத்தினால் (CAST - China Academy of Space Technology) வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டில் கோஃபென் வரிசையில் 6வது செயற்கைக் கோள் இதுவாகும். இதற்கு முன் கோஃபென்-1, பெரிய கோஃபென்-5 மற்றும் கோஃபென்-6 ஆகிய மூன்று செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த அனைத்து செயற்கைக் கோள்களும் சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
  • சீனாவின் உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமியைக் கண்காணிக்கும் அமைப்பானது (CHEUS - China High revolution Earth observation System) 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டில் ஒளியியல் மற்றும் செயற்கைத் துளை ரேடார் செயற்கைக் கோள்கள் மூலம் அனைத்து வகையான வானிலை மற்றும் அனைத்து நாட்களுக்குமான வானிலை ஆகியவற்றை இது அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்