திமுக மாநிலங்களவை உறுப்பினர் P. வில்சன் ஒரு தனிநபர் மசோதாவை அறிமுகப் படுத்தியுள்ளதையடுத்து உயர் மட்ட நீதித்துறையின் நியமனங்களில் இடஒதுக்கீடு குறித்த விவாதத்தினை மீண்டும் எழுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் SC/ST மற்றும் OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அந்த மசோதா கோருகிறது.
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது அங்கு எந்தவொரு நீதிபதியையும் நியமிக்கும் போது, அந்தந்த மாநில அரசுகளுடன் இந்திய அரசு கலந்தாலோசிக்கப் பட வேண்டும் என்றும் அது கோரியது.
மானியங்களுக்கான கோரிக்கை குறித்த 84வது அறிக்கையில், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை ஆனது மொத்தமுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையில் 50% ஆக இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்திருந்தது.
அரசியலமைப்பின் 124 மற்றும் 217வது சரத்துகளில் திருத்தம் செய்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்று சட்ட அமைச்சகம் அப்போது கூறியிருந்தது.
2018 ஆம் ஆண்டு முதல் பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட சுமார் 604 நீதிபதிகளில் 454 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
அதில் 18 பேர் மட்டுமே பட்டியலிடப்பட்ட சாதியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்ற நிலையில் அதில் ஒன்பது பேர் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள், 72 பேர் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள், 34 பேர் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.