TNPSC Thervupettagam

உயர் மின்னணு நகர்திற மின்பெருக்கி (High Electron Mobility Transistors – HEMTs)

March 23 , 2021 1253 days 537 0
  • இந்திய அறிவியலாளர்கள் காலியம் நைட்ரைடிலிருந்து (GaN) மிகவும் ஏதுவான HEMT என்ற பெருக்கிகளை உருவாக்கியுள்ளனர்.
  • இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் HEMT உபகரணமாகும்.
  • மின்சார கார்கள், இரயில் என்ஜின்கள்,  மின் பரிமாற்றம், அதிக மின்னழுத்தம் மற்றும் அதிக அதிர்வெண்ணுடைய நிலைமாற்றல் ஆகியவை அவசியமான மற்ற பிற பகுதிகளிலும் இந்த உபகரணம் மிகவும் பயனுள்ளதாகும்.
  • மேலும் மின்பெருக்கி தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் இது இந்தியாவைச் சுயசார்புடையதாக மாற்றும்.
  • மின்னணுப் பொருட்களில் பயன்படும் இது போன்ற நிலையான மற்றும் தரமான மின்பெருக்கிகளை இறக்குமதி செய்வதற்கான செலவையும் இது குறைக்கும்.
  • இது பொதுவாக ஒரு OFF சாதனமாகும்.
  • இது 4A வரையிலான மின்னோட்டத்தை நிலை மாற்றவும், 600V மின்னழுத்தத்தில் செயல்படும் ஒரு சாதனமாகும்.
  • HEMT பெருக்கிகள் டிஜிட்டல் ON-OFF நிலைமாற்றிகளாக ஒருங்கிணைந்த சுற்றுகளில் பயன்படுத்தப் படுகின்றன.
  • சாதாரணமான மின்பெருக்கிகளை காட்டிலும், மில்லி மீட்டர் அதிர்வெண்கள் வரை அதிக அதிர்வெண்ணில் HEMT மின்பெருக்கிகள் செயல்பட இயலும்.
  • HEMT பெருக்கிகள் கைபேசிகள், செயற்கைக் கோள் தொலைகாட்சி ஏற்பிகள், மின்னழுத்த மாற்றிகள், மற்றும் ரேடார் உபகரணங்கள் போன்ற உயர் அதிர்வெண் பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றன.
  • இவை பெரும்பாலும் செயற்கைக் கோள் ஏற்பிகளிலும் குறை மின்பெருக்கிகளிலும் பாதுகாப்புத் தொழில்துறைகளிலும்  உபயோகப்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்