- பல்வேறு துறைகளிலுள்ள 49 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு 101 உயர் லட்சிய மாவட்டங்களுக்கான அடிப்படைத் தரவரிசையை (Base line Ranking) நிதி ஆயோக் அறிவித்துள்ளது.
- இந்த குறியீடுகள், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர்வளங்கள், நிதியியல் சேர்ப்பு (Financial Inclusion) திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இந்தத் தொடக்கம் மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டார அளவிலும் போட்டித்தன்மையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது..
- உயர் லட்சிய மாவட்டங்களுக்கான திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்கள் அவற்றின் அதிகப்படியான வளர்ச்சியின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்படுகின்றன. இத்தரவரிசை போட்டித்துவ கூட்டாட்சி முறையின் தூய்மைத் தன்மையை ஊக்குவிக்கவும் அதை ஒரு எடுத்துக்காட்டாக விளக்கவும் உதவுகிறது.
- இத்தரவரிசையின் அடிப்படையில், ஆந்திரப்பிரதேசத்தின் விஷிய நகரம்13% மதிப்புகளோடு முதலிடத்திலுள்ளது.
- இத்தரவரிசையின் படி, மோசமான செயல்பாட்டைக் கொண்டுள்ள மாவட்டங்களாக ஹரியானாவின் மேவாட், தெலுங்கானாவின் ஆசிபாபாத் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சிங்கிரவுலி ஆகியவை உள்ளன.
- ‘மாற்றத்தில் முதன்மையானவர்கள்’ (Champions of Change) என்ற தரவுப் பலகை மாவட்டங்களின் உண்மை நேர வளர்ச்சியை (Real Time Progress) கண்காணிக்க நிதி ஆயோக்கினால் ஆந்திரப் பிரதேச அரசோடு கூட்டிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
உயர் லட்சிய மாவட்டத் திட்டத்திற்கான மாற்றம்
- இத்திட்டம் ஜனவரி 2018ல் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
- இத்திட்டம் மிகவும் வளர்ச்சியடையாத மாவட்டங்களை விரைவாகவும் திறம்படவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.