TNPSC Thervupettagam

உயர் வாராக்கடன்கள் விகிதம்

December 31 , 2017 2374 days 812 0
  • கேர் (CARE) மதிப்பீடுகள் என்ற நிறுவனத்தின் அறிக்கையின் படி, பிரிக்ஸ் நாடுகளின் மத்தியில் இந்தியா அதிக வாராக் கடன்களை (NPA-Non Performing Assets) பெற்றுள்ளதாகவும், அதிகளவிலான வாராக் கடன்களைப் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பட்டியலில் இந்தியாவிற்கு முன்னே உள்ள நாடுகள் கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து ஆகியனவாகும்.
  • PIIGS நாடுகளைச் சார்ந்த ஸ்பெயின் மட்டுமே பட்டியலில் இந்தியாவை விட பின் தங்கியுள்ளது.
  • PIIGS எனும் அடைமொழி நிதி நெருக்கடி ஏற்பட்டு வலுகுறைந்த பொருளாதாரத்தை கொண்ட போர்ச்சுகல், இத்தாலி, அயர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் என்ற ஐந்து ஐரோப்பிய நாடுகளைக் குறிப்பதாகும்.
  • இந்திய அரசு, அதிக வாராக் கடன் சுமையுடைய, அரசிற்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளுக்கு புத்துயிரளிக்க மறு மூலதனமளிக்கும் திட்டத்தை (Recapitalize) அறிவித்துள்ளது.
  • 2019 மார்ச் முதல் நடைமுறைக்கு வரும் மூன்றாவது பசேல் (Basel-3 Norms) மூலதன நிறைவு விகிதங்களுடன் (capital adequacy standards) ஒத்துப் போவதற்கும், மோசமான கடன்களை நிவர்த்தி செய்வதற்கும், இருப்புநிலைக் குறிப்பினை தூய்மைப்படுத்துவதற்கும் வங்கிகளுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்