திருவாரூர் மாவட்டத்தின் கூத்தநல்லூரில் ஒரு மகளிர் கல்லூரி உட்பட 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மாநில அரசு திறக்க உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர், திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், தர்மபுரி மாவட்டத்தில் எரியூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி மற்றும் வேலூர் மாவட்டத்தில் சேர்க்காடு ஆகிய பகுதிகளில் புதிய கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.
எல்லாப் பகுதிகளிலும் மாணாக்கர் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் சமமான உயர் கல்வியை வழங்குவதே இதன் நோக்கமாகும.
அடுத்த ஆண்டு முதல் கட்டிடப் பொறியியல் மற்றும் இயந்திரப் பொறியியல் பாடப் பிரிவுகளில் பட்டயக் கல்வி பாடப் பிரிவுகள் தமிழில் வெளியிடப்படும்.
ஈரோட்டிலுள்ள சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது அரசுப் பொறியியல் கல்லூரியாக மாற்றப்படும்.