உயர்கல்வி குறித்த நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கை 2025
February 13 , 2025 14 days 87 0
நிதி ஆயோக் அமைப்பானது, 'மாநிலங்கள் மற்றும் மாநில அரசு/பொதுப் பல்கலைக் கழகங்கள் மூலம் தரமான உயர்கல்வியை விரிவுபடுத்துதல்' என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை தயாரித்துள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகபட்சமாக 8.11% சதவீதம் கல்விக்காக செலவிடுகிறது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து மணிப்பூர் (7.25%), மேகாலயா (6.64%) மற்றும் திரிபுரா (6.19%) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இளையோருக்கான உயர்கல்வி செலவினத்தில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளன.
இராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் போன்ற சில மாநிலங்கள் இதில் பின்தங்கி உள்ளன.
உயர்கல்வி நிதியில் மகாராஷ்டிரா மாநிலம் 11,421 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் முன்னணியில் உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து பீகார் மாநிலம் (9,666 கோடி ரூபாய்) மற்றும் தமிழ்நாடு (7,237 கோடி ரூபாய்) ஆகியன இடம் பெற்றுள்ளன.
சிக்கிம் (142 கோடி ரூபாய்), அருணாச்சலப் பிரதேசம் (155 கோடி ரூபாய்), நாகாலாந்து (167 கோடி ரூபாய்) போன்ற மாநிலங்கள் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டினை மிகக் குறைவாகக் கொண்டுள்ளன.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) உயர்கல்வி செலவினங்களைக் கருத்தில் கொண்டால், பீகார் 1.56% பங்குடன் முன்னணி இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து 1.53% பங்குடன் ஜம்மு & காஷ்மீரும், 1.45% பங்குடன் மணிப்பூரும் இடம் பெற்றுள்ளன.
தெலுங்கானா 0.18% பங்குடன், மிகவும் குறைந்த சதவிகித நிதியையே ஒதுக்குகின்றன என்ற ஒரு நிலையில் குஜராத் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை தலா 0.23% நிதிகளை ஒதுக்குகின்றன.
தேசிய சராசரிப் பல்கலைக்கழகச் செறிவு ஆனது 0.8 ஆகும்.
சிக்கிமில் மிகவும் அதிகபட்சமாக 10.3 செறிவு பதிவாகியுள்ளது என்ற ஒரு நிலையில் அதனைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம், லடாக், இமாச்சலப் பிரதேசம், மேகாலயா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவற்றில், மாநில அளவிலான செறிவு தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது என்ற நிலையில் பீகார் மிகக் குறைந்த அளவில் 0.2 செறிவினைக் கொண்டுள்ளது.
கேரளா, சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆண்களை விட பெண்களின் சேர்க்கை விகிதம் அதிகமாக உள்ளது.
சண்டிகர், மிசோரம் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்ற சிறிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் சில நூறு மாணவர்கள் என்ற வேறுபாட்டுடன் ஒப்பீட்டளவில் மிகவும் சமநிலையான ஆண்-பெண் கல்விச் சேர்க்கை விகிதத்தினைக் கொண்டுள்ளன.