மத்திய அமைச்சரவை இடைநிலை மற்றும் உயர்நிலை கல்விக்காக காலாவதியாகாத ஒற்றை நிதியை உருவாக்கியுள்ளது
பிரதம மந்திரியின் தலைமையிலான அமைச்சரவை, இடைநிலை மற்றும் உயர்நிலை கல்விக்காக காலாவதியாகாத ஒற்றை நிதியை “மத்தியமிக் மற்றும் உச்தார் சிக்ஷா கோஷ்” (Madhyamik and Uchchtar Shiksha Kosh - MUSK) என்ற பொதுக் கணக்கை ஏற்படுத்தி அதில் இடைநிலை மற்றும் உயர் கல்விக்கான வரவு செலவுகள் கணக்கு வைக்கப்படும் என அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள இடைநிலை மற்றும் உயர்நிலை கல்வியை பெறும் மாணவர்களுக்கு கல்வித் துறையில் உள்ள திட்டங்களின் மூலம் MUSK-ன் நிதியானது பயன்படுத்தப்படும்
2007-ம் ஆண்டுகளுக்கான நிதிச்சட்டம் பிரிவு 136-இன் கீழ் இதற்கான மேல் வரி விதிக்கப்பட்டது.
நிர்வாகம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் செயல்பாடுகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும்.
இந்த MUSK ஆனது இருப்பு நிதியாக, இந்தியாவின் பொதுக் கணக்கில் வட்டி இல்லாத பிரிவில் வைக்கப்படும்.
தற்போது, மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது பெறப்படும் வரியை இடைநிலைக் கல்வியில் பின்வரும் திட்டங்களுக்காக பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் திட்டம்.
தேசிய அளவில் தகுதி வாய்ந்தோர்க்கு உதவித்தொகைத் திட்டம்
இடைநிலை கல்வி பெறும் மக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் தேசியத் திட்டம்.
உயர்கல்விக்கான மேல் வரியானது பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது.
வட்டியில் மானியம், நிரந்தர உதவித் தொகை மற்றும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகைத் திட்டம்.