சட்ட அதிகாரிகளின் நியமனங்களுக்கு தகுதி மட்டுமே ஒரே தேர்வு முறையாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அத்தகைய நியமனங்களில் கிடைமட்ட/ செங்குத்து இடஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதில்லை.
மிகவும் திறன் வாய்ந்த, தகுதியுள்ள மற்றும் திறன் மிக்க வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்றங்களில் அரசின் சார்பாக வாதிடுவதற்கு என்று நியமிப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் சட்ட அதிகாரிக்கும் இடையிலான உறவு ஒரு முதலாளி மற்றும் பணியாள் இடையேயான தொடர்பு போன்றதல்ல, அது முற்றிலும் தொழில்முறை சார்ந்ததாகும்.
அரசாங்கத்தினால் பணியமர்த்தப்பட்ட சட்ட அதிகாரிகள் ஒரு குடிமை சார்ந்தப் பதவியை வகிக்காததால், அரசியலமைப்பின் 16(4) வது சட்டப் பிரிவு அவர்களுக்குப் பொருந்தாது.