TNPSC Thervupettagam

உயிரி-RIDE திட்டம்

September 25 , 2024 3 days 67 0
  • உயிரித் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சிப் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு (உயிரி-RIDE) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்து உள்ளது.
  • இது ஆராய்ச்சியை விரைவுபடுத்துதல், தயாரிப்பு உருவாக்கத்தினை மேம்படுத்துதல் மற்றும் கல்விசார் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைப் பயன்பாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது செயற்கை உயிரியல், உயிரி மருந்து, உயிரி ஆற்றல் மற்றும் உயிரி நெகிழி போன்ற துறைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மானியங்கள் மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கும்.
  • உயிரி-RIDE என்பது 'உயிரி-உற்பத்தி மற்றும் உயிரி-அடித்தளம்' எனப்படும் தற்போது உள்ள இரண்டு திட்டங்களை ஒரு புதிய கூறுகளுடன் ஒருங்கிணைக்கிறது.
  • அவையாவன:
    • உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும்
    • தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு (I&ED).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்