உயிரித் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சிப் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு (உயிரி-RIDE) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்து உள்ளது.
இது ஆராய்ச்சியை விரைவுபடுத்துதல், தயாரிப்பு உருவாக்கத்தினை மேம்படுத்துதல் மற்றும் கல்விசார் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைப் பயன்பாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது செயற்கை உயிரியல், உயிரி மருந்து, உயிரி ஆற்றல் மற்றும் உயிரி நெகிழி போன்ற துறைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மானியங்கள் மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கும்.
உயிரி-RIDE என்பது 'உயிரி-உற்பத்தி மற்றும் உயிரி-அடித்தளம்' எனப்படும் தற்போது உள்ள இரண்டு திட்டங்களை ஒரு புதிய கூறுகளுடன் ஒருங்கிணைக்கிறது.
அவையாவன:
உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும்
தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு (I&ED).