TNPSC Thervupettagam

உயிரி எரிபொருள் கூட்டணி

April 4 , 2023 473 days 231 0
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், உலகளாவிய உயிரி எரி பொருள் கூட்டணி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா தலைமையிலான இந்த முயற்சியில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.
  • இந்தக் கூட்டணியின் நோக்கமானது, ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும், போக்குவரத்துத் தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளில் நிலையான உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் ஆகும்.
  • உயிரி எரிபொருள் உற்பத்தியில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முதல் 2 இடங்களில் உள்ளன.
  • அவை உயிரி டீசல் மற்றும் எத்தனால் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றன.
  • இவை இரண்டும் சேர்த்து உலகின் எத்தனால் உற்பத்தியில் 84% மற்றும் உலகின் உயிரி டீசல் உற்பத்தியில் 26% பங்கினைக் கொண்டுள்ளன.
  • இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகியவை உலகின் முன்னணி உயிரி எரி பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்