TNPSC Thervupettagam

உயிரி எரிபொருள் கொள்கையை செயல்படுத்தும் முதல் மாநிலம்

August 2 , 2018 2178 days 820 0
  • இந்தியாவில் மே 2018-ல் மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட உயிரி எரிபொருள்கள் மீதான தேசிய கொள்கையை செயல்படுத்தும் முதலாவது மாநிலம் இராஜஸ்தான் ஆகும்.
  • இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதலை உயர் அதிகாரம்மிக்க உயிரி எரிபொருள் ஆணையம் வழங்கியுள்ளது.
  • மேலும் உயிரி எரிபொருள் விதிகள் 2018-ஐ அரசாங்கம் வெளியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் மாநில அரசாங்கம் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். மாற்று எரிபொருள் மற்றும் ஆற்றல் வளங்கள் தொடர்பான துறைகளில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க இத்திட்டத்தின் கீழ் உதய்ப்பூரில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும்.
  • இத்திட்டம் உயிரி எரிபொருளை முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை என்று வகைப்படுத்துகிறது. நிதி மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை அளிப்பதற்காக ஒவ்வொரு வகையின் கீழும் உயிரி எரிபொருள்கள் இவ்வாறு வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்