நாட்டில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை 2018-க்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உயிரி எரிபொருள் வழங்கலானது (Supply) பின்வருவனவற்றை அடைவதற்கும் உதவி புரிகிறது.
கச்சா எண்ணெய்யின் இறக்குமதி சார்பை குறைப்பதற்கு உதவுகிறது. இது அந்நியச் செலவாணி இருப்பை சேமிப்பதற்கு உதவி புரியும்.
காய்ந்த வேளாண் பயிர்களை எரிப்பதை குறைப்பதன் மூலம் CO2 வெளியீடுகள் மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடுகளைக் குறைத்தல் மற்றும் வேளாண் கழிவுகளை உயிரி எரிபொருட்களாக மாற்றுதல் ஆகியவற்றில் உதவி புரிகிறது.
ஒவ்வொரு பிரிவின் கீழும் ஏற்கத்தகு நிதிகள் மற்றும் நிதியியல் ஊக்கத் தொகைகள் ஆகியவற்றை விரிவாக்குவதற்கு இயலச் செய்திட இந்த கொள்கை உயிரி எரிபொருட்களை வகைப்படுத்துகிறது.
அடிப்படை உயிரி எரிபொருள்கள்
முதல் தலைமுறை உயிரி எத்தனால் மற்றும் உயிரி டீசல்
மேம்படுத்தப்பட்ட உயிரி எரிபொருள்
இரண்டாம் தலைமுறை எத்தனால், நகராட்சி திடக்கழிவு முதல் எரிபொருள்கள், மூன்றாம் தலைமுறை உயிரி எரிபொருள், உயிரி - CNG.