குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாய விஞ்ஞானியான வல்லபாய் வஸ்தம்பாய் மர்வன்யா என்பவர் உயிரி-செறிவூட்டப்பட்ட கேரட்டுகளை உருவாக்கியுள்ளார்.
இந்தக் கேரட்டுகள் பொதுவாக “மதுபன் கஜர்” என்று அழைக்கப் படுகின்றன.
இது 277.75 மி.கி/கி.கி அளவு கொண்ட β – கரோட்டீன் மற்றும் 276.7 மி.கி/கி.கி அளவு கொண்ட இரும்புச் சத்தைக் கொண்டுள்ளது.
கேரட்டுகளின் சரிபார்த்தல் சோதனையானது தேசியப் புத்தாக்க அமைப்பினால் (NIF - National Innovation Foundation) மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இது இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இது நாடு முழுவதும் கடைமட்ட நிலையிலான புத்தாக்கங்களுக்கு நிறுவன நிலையிலான ஆதரவை அளிப்பதற்காக குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஏற்படுத்தப் பட்டது.