- விமான நிலையங்களில் CBRN அவசர நிலைமைகளுக்கு பதிலெதிர்ப்பு வழங்குவதற்கு விமானநிலைய அவசர நிலைமை கையாளுனர்களின் (Airport Emergency Handlers -AEHs) தயார் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தன்னுடைய முதல் மாதிரி பயிற்சியை (mock exercise) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster management Authority -NDMA) பாட்னா விமான நிலையத்தில் நடத்தியுள்ளது.
- CBRN அவசர நிலைமை என்பவை இராசயனம், உயிரியல், கதிரியக்கம் மற்றும் அணுசக்தி பொருட்களால் உண்டாகும் அச்சுறுத்தல் தொடர்பானவை (Chemical, Biological, Radiological and Nuclear material - CBRN).
- மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது தேசிய பேரிடர் பதிலெதிர்ப்பு படையுடன் (National Disaster Response Force-NDRF) இணைந்து தன்னுடைய முழு அளவிலான முதல் உயிரியல் மேலாண்மை அவசர கால பயிற்சியையும் (Biological Management Emergency Exercise) நடத்தியுள்ளது.
- இந்தப் பயிற்சி நிகழ்ச்சியானது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் இந்திய விமானநிலைய ஆணையம் (Airports Authority of India -AAI) மற்றும் அணுசக்தி மருந்து மற்றும் பயன்பாட்டு அறிவியல் நிறுவனம் (Institute of Nuclear Medicine & Allied Sciences INMAS) ஆகியவற்றுடனான கூட்டுறவோடு இணைந்து பாட்னாவில் உள்ள லோக் நாயக் ஜெயப் பிரகாஷ் விமான நிலையத்தில் (Lok Nayak Jayaprakash Airport) நடத்தப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பேரிடர் மேலாண்மைக்கான நாட்டின் உச்ச சட்ட அமைப்பாகும். இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
- இதன் விதிமுறைகள் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 (Disaster Management Act, 2005) என்ற சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
- இது 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- இந்தியப் பிரதமரைத் தலைவராகக் கொண்ட 9 உறுப்பினர்கள் அடங்கிய குழுவால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிர்வகிக்கப்படுகின்றது.