பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், உயிரி முறையில் உருவாக்கப்பட்ட ஒரு நுரையை உருவாக்கியுள்ளனர்.
இந்த நுரையானது உணவிற்கு என்று பயன்படுத்தப்படாத சில எண்ணெய்கள் மற்றும் தேயிலைகளிலிருந்துப் பெறப்பட்ட கடினப்படுத்திக் காரணிகள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப் படுகின்ற உயிரி சார்ந்த எபோக்சி வகை பிசின்களிலிருந்து தயாரிக்கப் படுகிறது.
இது புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களைச் சார்ந்து இருக்கும் நிலையை வெகுவாக குறைப்பதோடு, நுரையின் சிறப்பான அழுத்த வலிமையைப் பேணுகிறது.