TNPSC Thervupettagam

உயிரியல் பன்முகத் தன்மை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு - COP 15

December 20 , 2022 579 days 356 0
  • உயிரியல் பன்முகத் தன்மை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் 15வது பங்குதாரர்கள் மாநாடானது கனடாவின் மாண்ட்ரீயல் நகரில் தொடங்கியது.
  • இது 15வது பங்குதாரர்கள் மாநாட்டின் இரண்டாம் பகுதியாகும்.
  • இதன் முதல் பாகத்தினைச் சீனா நடத்தியது.
  • பல்லுயிர்ப் பாதுகாப்புக்கான பரப்பளவு அடிப்படையிலான இலக்குகள் என்ற ஒரு கருத்தை இந்தியா நிராகரித்துள்ளதோடு ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தக் கூடியது என்ற வகையிலான அணுகுமுறையினை ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளது.
  • பல்லுயிர் இழப்பைத் தடுக்கவும், அதனை மாற்றியமைக்கவும் 2020 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய உலகளாவியக் கட்டமைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு வேண்டி வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவுவதற்காக புதிய மற்றும் உறுதிப்பாடு மிக்க ஒரு நிதியை உருவாக்குவதற்கும் இந்தியா வலியுறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்