TNPSC Thervupettagam

உயிரியல் பன்முகத் தன்மை (திருத்தம்) மசோதா 2021

July 29 , 2023 359 days 206 0
  • மக்களவையானது 2021 ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத் தன்மை (திருத்தம்) என்ற மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • 2002 ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத் தன்மைச் சட்டத்தினைத் திருத்துவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • “உள்ளூர்ச் சமூகங்களுடன் அணுகல் மற்றும் பலன்களைப் பகிர்தல் மற்றும் உயிரியல் வளங்களை மேற்கொண்டுப் பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை விரிவுபடுத்த” இது முற்படுகிறது.
  • 2002 ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத் தன்மைச் சட்டம் ஆனது 1992 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப் பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உயிரியல் பன்முகத் தன்மை மீதான உடன்படிக்கையை நடைமுறைப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
  • உயிரியல் வளங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பாரம்பரியத் தகவல்களைப் பயன்படுத்துவதன் மூலம் எழும் பல்வேறு நன்மைகளின் நிலையான, நெறியான மற்றும் சமமானப் பகிர்வினை இது வழங்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்