2023 ஆம் ஆண்டு விதிகளின் திருத்தப்பட்ட சட்டத்தைச் செயல்படுத்துவதற்காக என்று உயிரியல் பன்முகத்தன்மை விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சட்டம் ஆனது விரைவான ஆராய்ச்சியை எளிதாக்குவதோடு, இந்திய மருத்துவ முறைகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கிறது, உயிரியல் வளங்களின் பிரிவில் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறது மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு விலக்கு அளிக்கிறது.
இந்த விதிகள் ஆனது,
தேசியப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம் (NBA) ஆனது தொழில்நுட்ப மற்றும் சட்ட ஆலோசனைகளை எவ்வாறு வழங்கும் என்பது குறித்தும்,
சட்டத்தின் விதிகளை செயல்படுத்துவதற்காக என்று மாநிலப் பல்லுயிர்ப் பெருக்க வாரியங்கள் அல்லது ஒன்றியப் பிரதேசப் பல்லுயிர்ப் பெருக்கச் சபைகளுக்கு வழங்கப் படும் விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல், மற்றும்
தேசியப் பல்லுயிர்ப் பெருக்க நிதியை நிர்வகித்தல் பற்றிய சிலபல விவரங்களைத் தருகிறது.
ஆராய்ச்சி முடிவுகளின் மீதான அறிவுசார் சொத்துரிமைகளை (IPR) வழங்குவதற்கு முன், இந்த ஆணையத்திடம் பதிவு செய்து முன் அனுமதியினைப் பெறுவதற்கான ஒரு நடைமுறையையும் இந்த விதிகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.