நான்கு மாதங்களில், இந்த ஆண்டு தமிழகத்தில் சாதனை அளவிலான உடல் உறுப்பு தான எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
130 நாட்களில் (2024 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதியன்று நிலவரப்படி), மாநிலத்தில் உயிரிழந்த உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை 100 என்ற அளவைத் தாண்டி உள்ளது.
இந்த ஆண்டு இது வரை 102 உயிரிழந்த நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் 178 பேரும் மற்றும் 2022 ஆம் ஆண்டில் 156 பேரும் உறுப்பு தானம் செய்தனர்.
இவர்களிடமிருந்து மொத்தம் 324 முக்கிய உறுப்புகளும் மற்றும் 271 திசுக்களும் பெறப் பட்டன.
இந்த ஆண்டும் இரண்டு கை மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன.
2023 ஆம் ஆண்டில் 178 உறுப்பு தானம் செய்பவர்களிடமிருந்து 1,000 உறுப்புகள் பெறப் பட்டன.