TNPSC Thervupettagam

உயிருள்ள பிரம்மாண்டமான கணவாய் மீன்

April 23 , 2025 17 hrs 0 min 23 0
  • அதன் இயற்கைச் சூழலில் காணப்படும் பிரம்மாண்டமான ஓர் இளம் கணவாய் மீன் ஆனது முதன்முதலில் ஆழ்கடலில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பிரம்மாண்டமான கணவாய் மீன் ஆனது "கண்ணாடி" கணவாய் மீன் குடும்பத்தின் (கிராஞ்சிடே) ஒரு பகுதியாகும்.
  • அண்டார்டிக் பெருங்கடலில், மூன்று அறியப்பட்ட கண்ணாடி கணவாய் இனங்கள் காணப் படுகின்றன ஆனால் புகைப்படங்களில் அவற்றை வேறுபடுத்தி அறிவது மிக கடினமாகும்.
  • வணிக ரீதியாக வேட்டையாடப்பட்ட எண்ணெய்த் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் இந்தப் பிரம்மாண்டமான கணவாய் மீன் குறித்து முதன்முதலில் 1925 ஆம் ஆண்டில் விவரிக்கப்பட்டது.
  • இந்தப் பிரம்மாண்டமான கணவாய் மீன் ஆனது ஏழு மீட்டர் வரை வளரக் கூடியது மற்றும் 500 கிலோகிராம் வரையில் எடையுள்ளதாக இருக்கும் என்பதோடு இது இந்தப் புவியின் மிகப் பெரிய முதுகெலும்பில்லா உயிரினமாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்