கெப்ளர் விண்கலத்திலிருந்துப் பெறப்பட்ட ஒரு சமீபத்திய தரவானது அதிக எண்ணிக்கையிலான அளவில் உயிர் வாழ்வதற்கு உகந்த வெளிக்கோள்கள் இருப்பதைக் காட்டுகின்றது.
வெளிக்கோள்கள் என்பது நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே அமைந்த கோள்களாகும்.
கெப்ளர் திட்டமானது 2009 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டது.
இது நாசாவின் முதலாவது கோள்களைத் தேடுவதற்கான ஒரு ஆய்வுத் திட்டமாகும்.
கெப்ளர் என்பதற்குப் பிறகு நாசாவின் சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள வெளிக்கோள்களை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளானது (Transiting Exoplanet Survey Satellite - TESS) விண்ணில் செலுத்தப் பட்டுள்ளது.
TESS ஆனது 2018 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் விண்ணில் செலுத்தப் பட்டுள்ளது.
TESS என்பது புதிய கோள்களைத் தேடிடும் நாசாவின் ஒரு ஆய்வுத் திட்டமாகும்.