TNPSC Thervupettagam

உய்ய மிகைநிலை Co2 - பிரேடான் சுழற்சி வசதி

February 28 , 2018 2461 days 852 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Indian Institute of Science-IISc) இந்தியாவின் முதல் உய்யமிகை நிலை Co2  பிரேடன் சுழற்சி சோதனை வளை தடப்பாதை  (Super Critical Co2     Brayton Cycle test Loop Facility)  வசதியை நிறுவியுள்ளது.
  • மின் ஆற்றல் உற்பத்தி நிலையங்களிலிருந்து சோலார் வெப்ப ஆற்றல் உள்பட பல்வேறு பசுமை ஆற்றல்களை உற்பத்தி செய்யக்கூடிய, சோலார் வெப்ப மூலத்துடன் இணைக்கப்பட்ட உலகின் முதல் சோதனை வளை தடப்பாதை (loop) தொழில்நுட்பம் இதுவாகும்.
  • இந்தோ - அமெரிக்க கூட்டு பசுமை ஆற்றல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய திட்டத்தின் (Indo-US Joint Clean Energy Research and Development Centre programme) கீழ் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் இதற்கு நிதியளிக்கப்படுகிறது.
  • இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கான சோலார் ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம் என்றழைக்கப்படும் இந்தோ-அமெரிக்க கூட்டமைப்பின் ஓர் பகுதியாக இத்தொழிற்நுட்ப வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • உய்ய மிகைநிலை கார்பன்-டை-ஆக்ஸைடு அடிப்படையிலான ஆற்றல் உற்பத்தியானது, வழக்கமான நீராவி அடிப்படையிலான மின் ஆற்றல் உற்பத்தி நிலையங்களுக்கு திறனான மாற்றை வழங்க வல்லதால் இது கணிசமான அளவு கார்பன் அடிச்சுவட்டை குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்