நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 1182.04 இலட்சம் மெட்ரிக் டன் உரங்கள் விற்கப் பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையானது கூறியுள்ளது.
தற்பொழுது உரங்களை வாங்குபவர் அல்லது விவசாயிகளின் அடையாளமானது ஆதார் மூலம் அடையாளம் காணல், கிசான் கடன் அட்டை, உயிரித்தரவு அல்லது பயோமெட்ரிக் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் உறுதி செய்யப் படுகின்றது.
உர நிறுவனங்களின் இந்த மானியங்கள் பயனாளிகளுக்குச் சில்லறை விற்பனையாளர்களால் விற்பனை செய்யப்பட்ட இரசீதுகளின் அடிப்படையில் அந்நிறுனங்களுக்கு வழங்கப் படுகின்றது.
உரங்களுக்கான மானியங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% எடுத்துக் கொள்கின்றது. உணவுப் பொருளுக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய நுகர்வு இதுவாகும்.
யூரியா, பொட்டாஷ் உரம் மற்றும் டை-அம்மோனியம் பாஸ்பேட் ஆகியவை உரங்களின் 3 முக்கியமான வகைகளாகும்.
இந்த அனைத்து உரங்களிடையே, யூரியா 86% பங்கைக் கொண்டுள்ளது.
தற்பொழுது, இந்திய அரசு யூரியாவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, என்பிகே (நைட்ரஜன், பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம்) வகை உரங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்குப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.