TNPSC Thervupettagam

உருது மொழியில் 'நீட்' தேர்வு: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு ஒப்புதல்

August 9 , 2017 2664 days 985 0
  • மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வுகள் தற்பொழுது ஆங்கிலம் மற்றும் 9 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
  • இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வை உருது மொழியிலும் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
  • இந்த நிலையில், இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், 'நீட்' தேர்வை உருது மொழியில் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
  • வரும் 2018-19 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வை பிற மொழிகளைப் போல் உருது மொழியிலும் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
  • தற்போது'நீட்' தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரிய மொழி, வங்க மொழி, அஸாமிய மொழி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்