TNPSC Thervupettagam

உருளைக் கிழங்குகள்

May 1 , 2019 1907 days 604 0
  • பெப்சிகோ நிறுவனமானது FC5 உருளைக் கிழங்கு வகையைப் பயிரிட்டதற்காக குஜராத்தைச் சேர்ந்த 4 விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
  • பெப்சிகோ நிறுவனமானது காப்புரிமை மீறுதலுக்காக அந்த விவசாயிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
  • பெப்சி நிறுவனமானது தனது லேஸ் (Lay’s) உருளைக் கிழங்கு கார வகைக்காக FC5 வகை உருளைக் கிழங்குகளை பிரத்யேகமாகப் பயன்படுத்துகின்றது.
  • FC5 வகை உருளைக் கிழங்கானது குறைந்த ஈரப்பதத் தன்மையைக் கொண்டிருக்கின்றது.
  • குறைந்த ஈரப்பதத் தன்மையானது இந்த வகை உருளைக் கிழங்குகளை நொறுக்குத் தீனிகளாக மாற்றுவதை எளிதாக்குகின்றது.
  • PPV & FR சட்டத்தின் கீழ் இந்தியாவில் பதிவு செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட 151 பயிர் வகைகளில் உருளைக் கிழங்கும் ஒன்றாகும்.
தாவர வகை மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்பிற்கான சட்டம்
  • இந்தச் சட்டமானது 2001 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த சட்டத்தின் குறிக்கோள்கள் பின்வருமாறு:
    • தாவர வகைகளின் பாதுகாப்பு
    • விவசாயிகள் மற்றும் வேளாண் பயிர்களை வளர்ப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்
    • புதிய வேளாண் பயிர்களைப் பயிரிடுதல் மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்