TNPSC Thervupettagam

உறக்க நிலைக்குச் சென்ற பிரக்யான் விண்கலம்

September 8 , 2023 445 days 261 0
  • செப்டம்பர் 02 ஆம் தேதியன்று, பிரக்யான் தனது பணிகளை முடித்து, பாதுகாப்பாக நிலை நிறுத்தப் பட்டு உறக்க நிலைக்கு (இடை நிறுத்தம்) உள்ளாக்கப்பட்டது.
  • பிரக்யான் கலத்தின் சமிஞ்கை இயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
  • சூரிய சக்தி தீர்ந்து மின்கலத்தின் ஆற்றல் தீர்ந்தவுடன் விக்ரம் தரையிறங்கு விண்கலமானது, பிரக்யானுக்கு அடுத்தபடியாக உறக்க நிலைக்குச் செல்லும் என்று இஸ்ரோ கூறியது.
  • நிலவில் சூரிய ஒளி படுதல் மறைந்ததும், வெப்பநிலை -200 டிகிரி செல்சியஸுக்குக் கீழே செல்லும்.
  • சூரியசக்தி தகடுகள் ஆனது, செப்டம்பர் 22 ஆம் தேதியன்று நிகழும் என எதிர்பார்க்கப் படும் அடுத்த சூரிய உதயத்தில் சூரிய ஒளியைப் பெறும் வகையில் அமைக்கப் பட்டு உள்ளது.
  • இஸ்ரோ அமைப்பானது, மற்றொரு ஆய்வுப் பணிகளுக்காக அந்த விண்கலம் மீண்டும் வெற்றிகரமான செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்த்துள்ளது.
  • அவ்வாறு செயல்படத் தொடங்கவில்லையெனில், அது இந்தியா சார்பான நிலவின் தூதராக எப்போதும் அங்கேயே இருக்கும்.
  • ஒரு சந்திர நாள் (14 பூமி நாட்கள்) ஆய்வுப் பணி நாட்கள் கொண்டத் தரையிறங்கு விண்கலம் மற்றும் உலாவிக் கலம் ஆனது, நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை மேற்கொள்வதற்கான அறிவியல் சாதனங்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்