தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) ஆனது, 14வது இந்திய உறுப்பு தான தின விருது விழாவினை ஏற்பாடு செய்தது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஜீவந்தன் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் K.இராம்பாபு என்பவர் ஜீவந்தன் விருதைப் பெற்றார்.
சண்டிகரில் உள்ள பிராந்திய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (ROTTO) வடக்குப் பிரிவு PGIMER நிறுவனமானது சிறந்த ROTTO விருதை வென்றது.
தெலுங்கானா சிறந்த மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (SOTTO)/சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கான விருதைப் பெற்ற அதே சமயம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரண்டாவது சிறந்த SOTTO/சிறப்பாகச் செயல்படும் மாநிலத்திற்கான விருதைப் பெற்றன.
மணிப்பூர் மாநிலமானது, வடகிழக்கு மாநிலங்களில் சிறந்த முன்னணித்துவம் பெறும் மாநிலம் என்ற விருதினைப் பெற்றது.
உறுப்பு தானத்தில் முன்னணித்துவம் பெறும் மாநிலங்கள் பிரிவில் விருது பெற்ற மாநிலங்கள்: 1) ஆந்திரப் பிரதேசம் 2) மத்தியப் பிரதேசம் மற்றும் 3) ஜம்மு & காஷ்மீர்.
சிறந்த மாற்று அறுவை சிகிச்சை சாராத உறுப்பு மீட்பு மையங்களுக்கான விருது (NTORC) அகமதாபாத்தில் உள்ள பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையானது, உயிரிழந்தவர்களால் அதிக எண்ணிக்கையில் உறுப்பு தானம் பதிவு செய்த சிறந்த தனியார் துறை மருத்துவமனை விருதினைப் பெற்றது.