TNPSC Thervupettagam

உறுப்பு தானம் – தமிழகம் முதலிடம்

November 28 , 2017 2582 days 2754 0
  • தொடர்ந்து மூன்றாவது முறையாக, நாட்டில் அதிக அளவிலான உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்றம் செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இத்தகைய சான்று தேசிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது. (NOTTO – National Organ and Tissue Transplant Organisation).
  • தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ திட்டத்தின் கீழ் உறுப்பு மாற்று சிகிச்சை தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகின்றது.
  • இந்தியாவிலேயே முதல் முறையாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான ஆணையம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
  •  ”டிரான்ஸ்டன்” (TRANSTAN – Transplant Authority of Tamilnadu) என்றழைக்கப்படும்  இந்த ஆணையம் தமிழ்நாட்டின்   உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட தன்னாட்சி உடைய தனி ஆணையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்