TNPSC Thervupettagam

உறுப்பு மற்றும் திசு மாற்றுச் சிகிச்சைக்கான சிறந்த மாநில விருது

August 6 , 2023 478 days 236 0
  • உடல் உறுப்பு தானச் சிகிச்சையில் தேசிய அளவில் சிறப்பாகச் செயல்படும் மாநில விருதினைத் தமிழ்நாடு மாநில அரசு பெற்றுள்ளது.
  • இந்த நிகழ்வினைத் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பானது (NOTTO) ஏற்பாடு செய்து உள்ளது.
  • மாநிலத்தில் தற்போது 13 உறுப்பு மாற்றுச் சிகிச்சை மருத்துவமனைகள் மற்றும் 26 உறுப்பு மீட்பு மையங்கள் உள்ளன.
  • தமிழ்நாட்டில் அமைந்துள்ள MOHAN அறக்கட்டளை எனப்படுகின்ற ஒரு தன்னார்வத் நிறுவனமானது, உறுப்பு தானத் துறையில் பணியாற்றும் சிறந்த தன்னார்வ நிறுவனம் என்ற விருதையும் பெற்றுள்ளது.
  • 2008 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இறந்தவர்களிடமிருந்துப் பெறப்படும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைத் திட்டம் தொடங்கப் பட்டதிலிருந்து, இன்றுவரை 1,706 பேர் உறுப்பு தானத்திற்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்