சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, மனித உடல்களில் உள்ள உறுப்புகளுக்கிடையேயான தொடர்பு வலையமைப்பினை புரிந்து கொள்ளச் செய்வதற்காக “மல்டிசென்ஸ்” எனப்படும் கணக்கீட்டு அணுகுமுறையை உருவாக்கி உள்ளது.
மல்டிசென்கள் உறுப்புகளுக்கிடையேயான தொடர்பின் பல்வேறு முக்கிய மூலக்கூறு கடத்திகளைக் கண்டறிய உதவும்.
இந்த முறையை உருவாக்குவதற்குப் பல்வேறு திசுக்களுக்கு கிடைக்கப் பெறும் மரபணுத் தகவல்களை அறிவியலாளர்கள் பயன்படுத்தினர்.
உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றமானது, பல்வேறு உயிரினங்கள் தங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, அவற்றின் ஆற்றல் இருப்புகளை மதிப்பிடச் செய்யவும் மற்றும் ஒட்டு மொத்த நல்வாழ்வைப் பராமரிக்கவும் வழி வகை செய்கிறது.