2024 ஆம் ஆண்டு பாங்காங் உறைந்த ஏரி மாரத்தான் போட்டியானது லடாக்கின் லே நகரில் நடைபெற்றது.
போபாலைச் சேர்ந்த பகவான் சிங் மற்றும் மகேஷ் குரானா ஆகியோர், பாங்காங் உறைந்த ஏரி மாரத்தான் போட்டியை நிறைவு செய்ததை அடுத்து, இத்தகையப் போட்டியில் வென்ற குறிப்பிட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இணைந்து உள்ளனர்.
லடாக்கின் இரண்டாவது பாங்காங் உறைந்த ஏரி மாரத்தான் போட்டியானது, 'உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த உறைந்த ஏரி மாரத்தான்' என்று அழைக்கப் படுகிறது.
18,680 அடி உயரத்தில் சுமார் -15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவான கடுமையான பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
பகவான் என்பவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முதல் மலையேறும் வீரர் ஆவார்.