TNPSC Thervupettagam

உறைந்த ஏரி மீது நடத்தப்படும் மாரத்தான் போட்டி

February 28 , 2024 268 days 450 0
  • 2024 ஆம் ஆண்டு பாங்காங் உறைந்த ஏரி மாரத்தான் போட்டியானது லடாக்கின் லே நகரில் நடைபெற்றது.
  • போபாலைச் சேர்ந்த பகவான் சிங் மற்றும் மகேஷ் குரானா ஆகியோர், பாங்காங் உறைந்த ஏரி மாரத்தான் போட்டியை நிறைவு செய்ததை அடுத்து, இத்தகையப் போட்டியில் வென்ற குறிப்பிட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இணைந்து உள்ளனர்.
  • லடாக்கின் இரண்டாவது பாங்காங் உறைந்த ஏரி மாரத்தான் போட்டியானது, 'உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த  உறைந்த ஏரி மாரத்தான்' என்று அழைக்கப் படுகிறது.
  • 18,680 அடி உயரத்தில் சுமார் -15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவான கடுமையான பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
  • பகவான் என்பவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முதல் மலையேறும் வீரர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்