TNPSC Thervupettagam

உற்பத்தி இடைவெளி அறிக்கை 2023

November 16 , 2023 246 days 251 0
  • ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் (SEI), பருவநிலைப் பகுப்பாய்வு அமைப்பு, E3G அமைப்பு, சர்வதேச நிலையான மேம்பாட்டு நிறுவனம் (IISD) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) ஆகியவை இணைந்து இந்த அறிக்கையினை தயாரித்துள்ளது.
  • திட்டமிடப்பட்ட புதைபடிவ எரிபொருள் உற்பத்தியானது 1.5°C வெப்பநிலை உயர்வுக்கான வரம்புகளை 110% ஆகவும், 2°C உயர்வுக்கு 69% ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதிகப்படியான உற்பத்தியை மேற்கொள்ளும் நாடுகள் வெப்பநிலை உயர்வினை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குள் கட்டுப்படுத்தும் வகையில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை குறைப்பதற்கு உறுதியளிக்கவில்லை.
  • 20 முக்கிய உற்பத்தி நாடுகளானது, உலகின் புதைபடிவ எரிபொருள் விநியோகத்தின் மொத்த உற்பத்தியில் 82% மற்றும் நுகர்வில் 73% பங்கினை கொண்டுள்ளன.
  • பல நாடுகள் ஏரிவாயுவை ஒரு “இணைப்பு” அல்லது “மாற்றத்திற்கான” எரிபொருளாக முன்வைக்கின்றன, ஆனாலும் அதிலிருந்து மாறுவதற்கான வெளிப்படையான திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்