ஸ்பெயின் நாட்டின் பெரியா டீ மாட்ரிட் நகரில் மார்ச் 6 முதல் 8 வரை உலக ATM மாநாடு ( World ATM Congress / WATMC – 2018) நடைபெற்றது.
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இம்மாநாடானது, உலகின் மிகப்பெரிய சர்வதேச விமானப் போக்குவரத்து மேலாண்மைக் கண்காட்சி (ATM – Air traffic Management) மற்றும் மாநாடாகும். ஆண்டுதோறும் பல்வேறு விமானத் துறைசார் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்தியாவிலிருந்து இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India-AAI) இந்த மாநாட்டில் பங்கெடுத்து தன்னுடைய தொடக்கங்கள் (initiatives) மற்றும் சாதனைகளை காட்சிப்படுத்தியது.
விமானப் போக்குவரத்து சேவைக் கழகமும் (Civil Air Navigation Services Organization-CANSO) விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் (Air Traffic Control Association -ATCA) சங்கமும் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன.
விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள உலகின் முன்னணி விமான உதிரிபாக தயாரிப்பாளர்கள், நிபுணர்கள், பங்குதாரர்கள் விமானப் போக்குவரத்து மேலாண்மையில் தங்களுக்குள்ள அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு அவர்களை ஒரே தளத்தில் ஒங்கிணைப்பதற்காக இம்மாநாடு நடத்தப்படுகின்றது.