TNPSC Thervupettagam

உலக ஃபின்டெக்ஸ் தரவுத்தளம்

July 14 , 2022 865 days 421 0
  • உலக வங்கியானது 2021 ஆம் ஆண்டு உலக ஃபின்டெக்ஸ் தரவுத் தளத்தை வெளியிட்டு உள்ளது.
  • 123 நாடுகளில் உள்ள மக்கள் வங்கி அட்டைகள், தானியங்குப் பண வழங்கீட்டு இயந்திரங்கள், கைபேசிகள் மற்றும் இணையம் போன்ற முறையான மற்றும் முறை சாரா நிதிச் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை இது ஆய்வு செய்தது.
  • உலகளவில், 2021ஆம் ஆண்டில் 76 சதவீத வயது வந்தோர் வங்கி அல்லது ஒழுங்கு படுத்தப் பட்ட நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ளனர்.
  • இதில் கடன் சங்கம், நுண்நிதி நிறுவனம் அல்லது கைபேசி வழியிலான பணச் சேவை வழங்கும் நிறுவனம் ஆகியவை அடங்கும்.
  • வங்கிக் கணக்கு இல்லாத வயது வந்தோர் பிரிவினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நிதி நிறுவனத்தில் கணக்கைத் தொடங்கினால், பிறர் உதவியின்றி அதைப் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளனர்.
  • இந்தியாவில் முறையாக வங்கியை அணுகுவதற்கான குறைந்த வாய்ப்பு மற்றும் நம்பிக்கையின்மையே உள்ளது.
  • வயது வந்தோர் பிரிவினர்களில் 80 சதவீதத்தினரின் கணக்கு உரிமைக்கு ஆதார் முக்கியமானப் பங்காற்றியுள்ளது (2011 ஆம் ஆண்டில் இது 35% ஆக இருந்து).
  • பண உபயோகத்திலிருந்து உடலியல் அடையாளங்கள் சார்ந்த திறன் அட்டைகளுக்கு மாறுவது ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் இழப்பு ஏற்படுவதை 47% குறைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்