இந்த நாள் உலகெங்கிலும் உள்ள அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களின் நெகிழ்திறனையும் கௌரவிக்கிறது.
இந்த நாள் மோதல்கள், துன்புறுத்தல் அல்லது வன்முறை காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மில்லியன் கணக்கான தனிநபர்கள் எதிர் கொள்ளும் சவால்களை நினைவூட்டுகிறது.
இது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் உரிமைகளுக்காக வாதிடவும், மற்றும் பாதுகாப்பு விரும்புபவர்களுடனான ஒற்றுமையைக் காட்டவும் வாய்ப்பளிக்கிறது.
இந்த நாள் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
இது உலகளவில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பற்றிய ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதையும், 1951 ஆம் ஆண்டு அகதிகள் உடன்படிக்கையின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Hope away from home" என்பதாகும்.