ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9-ம் தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தை (Universal Postal Union-UPU) 1874-ல் சுவிஸ் தலைநகரமான பெர்ன் நகரத்தில் ஏற்படுத்தியதன் ஆண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இது உலக அஞ்சல் தினமாக 1969-ம் வருடம் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தின் சபையால் அறிவிக்கப்பட்டது.
இந்த உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் உலக மக்கள் மற்றும் வியாபாரங்களின் தினசரி வாழ்வில், அஞ்சல்துறையைப் பற்றியும், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக அதன் பங்களிப்பைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும்.