TNPSC Thervupettagam

உலக அடிமை நிலைக் குறியீடு 2023

June 2 , 2023 542 days 422 0
  • மனித உரிமைகள் குழுவான வாக் ஃப்ரீ அறக்கட்டளையானது 2023 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அடிமைக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • இது 160 நாடுகளில் நிலவி வரும் நவீனகால அடிமை நிலைகளின் ஒரு மதிப்பீடாகும்.
  • 2021 ஆம் ஆண்டில் எந்த ஒரு நாளிலும் 50 மில்லியன் மக்கள் நவீனகால அடிமைத் தனத்தின் சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
  • G20 அமைப்பின் உறுப்பு நாடுகளானது, வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுக்கின்றன என்பதால், இந்த அதிகரிப்புக்கு அதிகப் பங்கினை அளிக்கிறது.
  • G20 நாடுகளில், 11 மில்லியன் மக்கள் கட்டாயத் தொழிலாளர்களாக வேலை செய்வதாக பதிவாகியுள்ளதையடுத்து இப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா, இந்தோனேசியா, துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்