அதிர்ச்சிகரமான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வேண்டி, அதிர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதும், அவர்கள் தங்கள் வாழ்வில் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது குறித்து கற்பிப்பதும் உலக அதிர்ச்சி தினத்தினைக் கடைபிடிப்பதன் முக்கிய நோக்கமாகும்.
வருடாந்திர உலக அதிர்ச்சி தினமானது முதல் முறையாக 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் புது டெல்லியில் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் விபத்துகளால் ஏற்படும் காயத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டு இறக்கின்றனர்.
இது ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒரு மரணம் நிகழ்வதற்கு இணையாக உள்ளது. என்பதோடு, இது உலகளவில் ஏற்படும் இறப்புகளில் 9 சதவிகிதமாகவும் உள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் 10 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழப்பார்கள் என்றும், மேலும் 2 கோடி பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.