உலக அபாய அறிக்கை 2020 (WRI - World Risk Index) என்ற அறிக்கையின் படி மொத்தமுள்ள 181 நாடுகளில் இந்தியா 89வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
WRI ஆனது ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மனிதப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து மேம்படுத்தப் பட்டுள்ளது. இது அமைதி மற்றும் ஆயுதப் புரட்சிக்கான சர்வதேச சட்ட அமைப்பினால் கணக்கிடப்படுகின்றது.
இதில் வனூட்டுவா மற்றும் டோங்கா ஆகிய நாடுகள் முன்னிலையிலும் கத்தார் நாடு கடைசி இடத்திலும் உள்ளன.
WRI என்பது “கட்டாய இடமாற்றல் மற்றும் இடப்பெயர்வு” மீது சிறப்புக் கவனம் செலுத்துவதுடன் உலக அபாய அறிக்கை 2020 என்ற அறிக்கையின் ஒரு பகுதி ஆகும்.
இந்தியாவானது கடுமையான பேரிடர்கள், ஏற்றுக் கொள்ளும் திறனில் உள்ள குறைபாடு, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இருக்கும் குறைபாடு ஆகிய வரிசையில் இலங்கை, பூடான், மாலத் தீவுகள் ஆகிய நாடுகளுக்குப் பின்னால் உள்ளது.
ஓசானியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா ஆகியவை உலகளாவிய அளவில் முக்கியமான பகுதிகளாகும்.