எதிர்வரும் அமெரிக்க அதிபர் டொன்ல்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோருக்கிடையேயான மாநாட்டை நினைவு கூர்வதற்காகச் சிங்கப்பூர் உலக அமைதி பதக்கத்தை (World Peace medallion) வெளியிட்டுள்ளது.
இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பானது தற்சமயம் அமெரிக்காவின் அதிபராகவும், வடகொரியாவின் தலைவராகவும் உள்ளவர்களிடையே நடைபெறும் முதல் சந்திப்பாகும்.
இந்தப் பதக்கத்தில் அமைதியின் திருமறைச் சின்னங்களான (biblical symbol of peace) புறா மற்றும் ஆலிவ் கிளை ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் அதனோடு இரு நாடுகளின் தேசிய மலர்களான ரோஜா மற்றும் மேக்னோலியா (magnolia) மலர்களும் இடம் பெற்றுள்ளன.
2015-ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாடானது கம்யூனிஸ்டுகளுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையிலான 1949ஆம் ஆண்டின் சிவில் போருக்குப் பிறகு முதன் முறையாக தைவான் நாட்டின் தலைவர்களுக்கும், சீனாவிற்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை நடத்தியது.